தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்ட அதிநவீன கப்பல் கட்டுமான திட்டம் தொடர்பாக, சென்னையில் முதல்வர் விஜயை எச்டி ஹூண்டாய் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேசினர்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், திட்டத்தின் செயல்படுத்தும் திட்டவரைவு மற்றும் முதலீட்டு நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எச்டி ஹூண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முதலீட்டு வழிமுறைகள் குறித்து முதல்வருடன் விவாதித்தனர்.
முறையான திட்டமிடலும் வழிகாட்டுதலும் கொண்டு திட்டம் நிறைவேற்றப்பட்டால், தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதுடன் தென் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





