வெளிநாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாரீஸில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மூன்று நாடுகள் பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸ் சென்றிருந்த அவர், அங்கு நடைபெற்ற ஜி7 மாநாட்டிலும் பங்கேற்றார். மாநாட்டு நிகழ்வுகளை முடித்துக் கொண்டு பாரீஸ் வந்தடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செயின்ட்கோபயின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ பெனாய்ட் பேஜின், அல்ஸ்டோம் நிறுவனத்தின் சிஇஓ மார்டின் சியோன், மிஸ்ட்ரல் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் துணை நிறுவனர் ஆர்தர் மென்ஸ்ச், சிஎம்ஏ சிஜிஎம் குழுமத்தின் தலைவர் மற்றும் சிஇஓ ரோடோல்பே சடே ஆகியோருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
மேலும், பிரான்ஸ் அதிபர் எமானுவல் மேக்ரானுடன் இணைந்து விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.





