சென்னை: தமிழக மின் வாரியத்தின் (TNEB) தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

பேட்டியில் அவர் அரசியல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, திமுக பாஜவின் மறைமுக முகமாக செயல்படுகிறது என்றும், செந்தில்பாலாஜி தொடர்பான நடவடிக்கை கோப்பில் கவர்னர் இதுவரை கையெழுத்திடாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, முந்தைய ஐந்து ஆண்டு ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் மறைக்கப்பட்டதாகவும், அண்ணா பல்கலை விவகாரம் மற்றும் முகப்பேர் சிறுமி பாலியல் வழக்கில் நடவடிக்கை தாமதமானதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கிறது; தயவு தாட்சணையின்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் தனிப்பட்ட குற்றச்சம்பவங்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன; பொருத்தமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், முந்தைய அரசு போல மூடி மறைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், “சிங்கப்பெண்” படையை பெரிதாக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.