தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சில புதிய வழிகாட்டுதல்களை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை கூட்டத்தொடரில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து அமைச்சர்களுடன் விவாதிக்க வேண்டும் என அவர் கூறியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள் மற்றும் ஆய்வுக்கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டர்கள் நடத்தும் ஆய்வுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்று, தொகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கவனிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தற்போதைய ஆட்சி இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும்; அதன் பின்னர் தி.மு.க. ஆட்சி வரும் என அவர் தெரிவித்ததாகவும் தகவல்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.





