புதுடில்லி: இந்தியாவில் உலகளாவிய முதலீடுகள் அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தன் பதிவில், சிறந்த உலகை உருவாக்குவதில் பங்காற்ற இந்தியா எப்போதும் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், இந்தியாவின் 140 கோடி மக்களின் காரணமாக உலகம் இந்தியாவை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பார்க்கிறது என அவர் குறிப்பிட்டார்.
இதனால்தான் உலக நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதோடு, இந்தியாவில் முதலீடுகளையும் அதிகரித்து வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.





