தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் ‘குதிரை பேரம்’ நடந்ததாக கூறி தவெக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 19) தள்ளுபடி செய்தது.

மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு 144 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக குறிப்பிடப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், ஓட்டெடுப்பில் வெற்றி பெற அரசியல் கட்சிகளிடையே சுமார் ரூ.1,000 கோடி அளவில் குதிரை பேரம் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறி, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி வி.மோகனா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுபோன்ற விவகாரத்தை பொதுநல வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.