சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா–ஆப்கானிஸ்தான் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் பின்னர் மீண்டு வந்தது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. பிரஷித் கிருஷ்ணா குர்பாஸ் (5), இப்ராஹிம் (11), ரஹமத் ஷா (5), ரசூலி (1) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் ஆப்கானிஸ்தான் 36 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அழுத்தத்தில் சிக்கியது.

அதன்பின் கேப்டன் சஹிதி மற்றும் ஒமர்சாய் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர்.

போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.