சென்னை: தமிழ்நாடு சட்டசபை நேரலை ஒளிபரப்பு தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்புவது “வேடிக்கை” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் சட்டசபை நேரலையில் முதல்வர் பேசுவது மட்டுமே ஒளிபரப்பாகி, பிற உறுப்பினர்களின் பேச்சுகள் இடம்பெறவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். தற்போது சிறு, சிறு குறைகள் இருக்கலாம் என்றாலும், யாருக்கும் பாகுபாடு இல்லாமல் செயல்படுவோம் என்றும் கூறினார்.
அதே பேட்டியில், முதல்வர் விஜய் தெளிவான சிந்தனையுடனும் தொலைநோக்கு பார்வையுடனும் திட்டங்களை வகுத்து செயல்படுவதாக அவர் பாராட்டினார். அதிமுகவிலிருந்தும் பலர் தவெகவில் இணைகிறார்கள் எனக் கூறி, கட்சியின் வழிநடத்தல் குறித்து இபிஎஸ் எதிர்காலத்தை யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதுவரை கட்சியில் இணைந்தவர்களில் யார்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்றும் செங்கோட்டையன் கூறினார்.





