மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு, ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்தால் 16 பிக்ஸட்-டோஸ் காம்பினேஷன் (FDC) மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், அறிவியல் ரீதியாகச் சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்குமான நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தரவை அமல்படுத்த மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் அமலாக்க முகமைகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரும் சட்டத்திற்கு இணங்க தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பட்டியல் (அறிவிக்கப்பட்டபடி):

  • அசிடைல் சாலிசிலிக் அமிலம் + எத்தோஹெப்டசைன்
  • டைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு
  • டைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு + குளோர்டையாஸெபாக்சைடு
  • கில்க்லாசைட் + குரோமியம் பிகொலினேட்
  • பாராசிட்டமால் + லிக்னோகைன்
  • அமோக்ஸிசிலின் + செராடியோபெப்டிடேஸ் + லாக்டோபாகிலஸ்
  • அமோக்ஸிசிலின் + க்ளோக்சாசிலின் + லாக்டிக் ஆசிட் பேசிலஸ் + செராடியோபெப்டிடேஸ்
  • அமோக்ஸிசிலின் + செராடியோபெப்டிடேஸ்
  • செபாட்ராக்சில் + புரோபெனசிட்
  • செபூராக்ஸைம் + செராடியோபெப்டிடேஸ்
  • கற்றாழை (அலோ வேரா) உடன் வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, ஜோஜோபா ஆயில், ஆரஞ்சு ஆயில், டீ ட்ரீ ஆயில் உள்ளிட்ட மூலிகைச் சேர்மங்கள் கலந்த 10 வகை தோல்/அழகு களிம்புகள்