திமுக கூட்டணியிலிருந்து முறைப்படி விலகுவதாக முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. இதன் மூலம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கூட்டணி உறவு முடிவுக்கு வந்துள்ளது.
சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் திமுக அணியில் இடம்பெற்று போட்டியிட்ட முஸ்லிம் லீக், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டசபை உருவான நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக கட்சி அறிவித்தது. மேலும், கட்சி சார்பில் ஷாஜஹான் அமைச்சரவையில் இடம்பெற்றார்.
திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற பின்னர் தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததும், அமைச்சரவையில் இடம் பெற்றதும் தொடர்பாக திமுக மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கிடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்த மாநிலக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டது. திமுக கூட்டணியிலிருந்து முஸ்லிம் லீக் விலகுவது இதுவே முதல் முறை எனவும் கட்சி தரப்பில் குறிப்பிடப்பட்டது.





