ரயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போரிடம் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.250 இலிருந்து ரூ.500 ஆக ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து அபராதத் தொகையும் வசூலிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.
நாடு முழுவதும் சுமார் 13,000 பயணியர் ரயில்களில் தினமும் 2.5 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்வதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
புதிய அபராதத் தொகையை ஜூலை 1 முதல் அமல்படுத்த அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





