வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் தாம் போற்றும் உலகத் தலைவர்களில் முக்கியமானவர்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், மோடி மற்றும் ஷி ஜின்பிங்கை தாம் உயர்வாக மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், “பலவீனமான தலைவர்” யார் என்பதை கூற அவர் மறுத்தார். ஷி ஜின்பிங் தொழில்முறை அணுகுமுறையுடன் செயல்படுபவர் என்றும், மோடி உறுதியான தலைவரென்றும் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், ஈரான் போருக்குப் பிறகு தன் அதிகாரத்திற்கு வரம்பில்லை என்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.