சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உத்தவ் அணியைச் சேர்ந்த 6 எம்பிக்கள் பாஜவில் இணைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பார்லிமென்ட் குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோதும் அந்த எம்பிக்கள் அதை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் உருக்கமாக பேசிய உத்தவ், சிவசேனா தொண்டர்கள் மனச்சோர்வடையவில்லை; மாறாக உற்சாகமடைந்துள்ளனர் என்றார். தன் மீது நம்பிக்கையும் விசுவாசமும் இல்லையெனில், கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், 2024 லோக்சபா தேர்தலில் அந்த எம்பிக்களுக்கு வாக்களித்த வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 30 ஆண்டு கால கூட்டணிக்குப் பிறகும் பாஜவுடன் இணைக்கவில்லை என்ற நிலையில், எங்களால் எப்படி காங்கிரஸுடன் இணைய முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.