‘நான் முதல்வன்’ திட்டத்தின் சாதனைகளையும், அதற்கான மக்களின் நன்றியுணர்வையும் அழிக்க முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளப் பக்கங்களின் பெயரை மாற்றலாம்; அதில் இருந்த பதிவுகளை நீக்கலாம் என்றாலும், திட்டத்தின் தாக்கம் மக்கள் மனங்களில் ஆழமாக பதிந்திருக்கும் என அவர் கூறினார்.
பலரின் கனவை நனவாக்கிய திட்டமாக ‘நான் முதல்வன்’ இருப்பதாகவும், அதன் பயன்கள் மக்கள் நினைவில் நிலைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது ஆட்சிக் காலத்தில் ‘படிங்க, படிங்க’ என்று தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவவே ‘நான் முதல்வன்’ என்ற தனது கனவு திட்டத்தை தொடங்கியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை முடக்குவது தமிழக இளைஞர்களின் வளர்ச்சியையே முடக்கும் செயலாக மாறும் என்றும், அது அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.





