பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் ஜூன் 22 அன்று தனது பதவி விலகல் முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லேபர் கட்சிக்குள் அதிகரித்த அழுத்தமே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான உட்கட்சி அரசியல் நெருக்கடி மற்றும் தலைமைத்துவ சவால்கள் இந்த விவகாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அவருக்கு எதிராகத் திரும்பியதாகவும், இதனால் பிரிட்டன் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பிரதமர் பதவி விலகப் போவதாகும் செய்திகளை அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன. ஸ்டார்மர் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தொடர்ந்து தனது பொறுப்புகளை நிறைவேற்றுகிறார் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், கட்சிக்குள் அவரது செல்வாக்கு கணிசமாக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் கொள்கை மாற்றங்களுக்குப் பிறகு, மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என பல தரப்பினர் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

இதற்கிடையில், தனது தலைமையை எதிர்க்கும் எந்த சவாலையும் எதிர்த்து போராடுவேன் என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.