வான்கூவர் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணி திருப்பி வென்று அசத்தல் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் நியூசிலாந்தின் பின் சுர்மான் கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றார்.

இரண்டாம் பாதியில் எகிப்து அணியின் ஆட்டம் வேகம் பெற்றது. 58வது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ கோல் அடித்து சமனாக்கினார் (1-1). தொடர்ந்து 67வது நிமிடத்தில் முகமது சலா கோல் அடித்து எகிப்தை 2-1 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

82வது நிமிடத்தில் டிரெஜ்குவெட் கோல் அடித்து முன்னிலையை 3-1 ஆக உயர்த்தினார். இறுதிவரை நியூசிலாந்து முயன்றும் பலனில்லை. இந்த வெற்றியுடன் எகிப்து அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.