முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் முதலீடு செய்ய வந்த தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் கேட்டதால் பெரிய முதலீடுகள் கைமாறினதாக அமைச்சர் கீர்த்தனா குற்றம்சாட்டினார்.
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 23% முதல் 24% வரை கமிஷன் தனியாக வாங்கி வைத்தால்தான் அடுத்த வேலை நகரும் என்ற நிலை இருந்ததாக கூறினார். தங்களது தரப்பு “ஜீரோ கரப்ஷன் மாடல்” கொண்டு வந்ததாகவும், இப்போது தங்களைப் பற்றி கேள்வி கேட்பவர்கள் யார் எனவும் அவர் விமர்சித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கமிஷன் கேட்டதால் தொழில் தொடங்க வந்த 25 நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றதாகவும், தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு பறிபோனதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் சுமார் 2 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகளும் இழந்ததாக கூறிய அமைச்சர், இந்த இழப்புக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.





