மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் பரபரப்பு நீடிக்கும் நிலையில், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே, கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் மாற்றங்கள் குறித்து சரியான நேரம் வந்ததாக தான் உணரும்போது ஊடகங்களை அழைத்து பேசுவேன் என்று தெரிவித்தார்.
அவரது அணியில் இருந்து ஆறு எம்பிக்கள் பாஜவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பார்லிமென்ட் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் அதை புறக்கணித்ததாகவும், இது உத்தவ் அணிக்கு அதிர்ச்சியளித்ததாகவும் கூறப்படுகிறது.
அதிருப்தி எம்பிக்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், ரூ.25 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் உத்தவ் அணியினர் குற்றம்சாட்டினர். இதற்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கட்சி அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நிருபர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, அதிருப்தி எம்பிக்கள் முதலில் தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்கட்டும் என்றும், தங்களின் தரப்பும் விரைவில் விளக்கப்படும் என்றும் கூறினார்.
சரியான நேரம் வந்ததாக தான் உணரும்போது ஊடகங்களை அழைத்து விரிவாக பேசுவேன் எனவும் அவர் மீண்டும் தெரிவித்தார்.





