சென்னை: தன் பிறந்த நாளுக்காக தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்ட கேக்கை வெட்டாமல் முதல்வர் விஜய் திருப்பி அனுப்பினார்.

நேற்று முதல்வர் விஜய் தனது 53வது பிறந்த நாளை கொண்டாடினார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த பிறந்த நாள் நிகழ்வுக்காக திரையுலகைச் சேர்ந்த ஒருவரின் ஏற்பாட்டில் மூன்றடுக்கு கேக் தயாரித்து தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

போலீசார் எந்தவித கூடுதல் கெடுபிடியும் இல்லாமல் முதல்வர் அறைக்கு அருகே கேக்கை அனுப்பி வைத்தனர். ஆனால் கன்னிகைபேர் பகுதியில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தை காரணமாகக் கூறி, முதல்வர் விஜய் கேக்கை வெட்டாமல் திருப்பி அனுப்பினார்.