தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் 18 இடங்களில் அமலாக்கத்துறை (ED) செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி வருகிறது.
2017ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
அந்த வழக்கை அடிப்படையாக கொண்டு, சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறையும் பணமோசடி தொடர்பான வழக்கை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலின்படி, ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் சில நிறுவனங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சோதனை முடிவுகள் குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை.





