மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம், புகைப்படங்கள் மற்றும் குறும்பட வீடியோக்களைப் பகிரும் பிரபல சமூக வலைத்தளமாக உள்ளது. பலரும் இதை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவதுடன், நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி மற்றும் புகைப்படங்களையும் அனுப்புகின்றனர்.
இந்நிலையில், ஸ்மார்ட் டிவிகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பார்க்கவும், பகிரவும் உதவும் ‘Instagram for TV’ என்ற பிரத்யேக வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை பயன்படுத்த, டிவியின் ஆப் ஸ்டோரில் சென்று Instagram என தேடி இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஆப்பை திறந்தவுடன் திரையில் வரும் QR குறியீட்டை மொபைல் மூலம் ஸ்கேன் செய்து உள்நுழையலாம்.
இந்த வசதி முதல்கட்டமாக 2020க்குப் பிறகு வெளியான சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வசதி பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.





