மாநில மின்வாரியத் துறையைப் பற்றிய வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
நிருபர்களிடம் பேசிய அவர், மின் துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 300 பேருக்கு முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளதாக கூறினார்.
மேலும் அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர், “Party Fund” விவகாரம் பேசப்பட்டதும் திமுக வெளிநடப்பு செய்ததாக குற்றம்சாட்டி, இதுகுறித்து வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், முன்பு தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் வருவது குறைவாக இருந்ததாகவும், தற்போது மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்க தலைமைச் செயலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.





