அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அரசு சுகாதார சேவைகளின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், குழந்தை பிறப்பை நினைவாகக் குறிக்கவும், தாய்மையின் மகிழ்ச்சியும் முக்கியத்துவமும் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு கூறியுள்ளது.

இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோர முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி, ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இந்த திட்டத்தின் பயனை பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள். திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தை செப்டம்பர் 15 அன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.