சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்த ‘பினிஷிங்’ என அழைக்கப்பட்ட கைச் சைகை, தமிழக அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு செய்தியாளர்களைச் சந்தித்து, தனது வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் அதே சைகையை செய்து காட்டினார். அந்தக் காட்சி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இன்று சட்டசபையில் பதிலுரை நிகழ்த்திய முதல்வர் விஜய், சபாநாயகரிடம் அனுமதி பெற்று ஸ்டாலின் செய்த அதே சைகையை சபையில் செய்து காட்டினார்.

இதற்கிடையில் சட்டசபையில் குழப்பம் ஏற்பட்டதாகவும், திமுக வெளிநடப்பு செய்ததாகவும், பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.