சென்னை: முதல்வர் விஜய்க்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வழங்கிய பரிசு, அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க.வை சேர்ந்த இளம் அமைச்சர் ரமேஷ், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் அவரை சந்தித்து வாழ்த்தினார். அப்போது அவர் மாதா சிலை ஒன்றையும், “உலக சிந்தனை சிற்பி தந்தை பெரியார்” என்ற தலைப்பிலான புத்தகத்தையும் பரிசளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை அமைச்சர்கள் முதல்வரை சந்திக்கும் போது துறை சார்ந்த நினைவுப் பரிசுகளை வழங்குவது வழக்கமாக இருந்து வந்ததாகவும், முந்தைய ஆட்சிக்காலங்களிலும் கோவில் சார்ந்த பொருட்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
ஆனால் இம்முறை வழங்கப்பட்ட பரிசுகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசியதாக கூறப்படும் ஈ.வெ.ரா. (பெரியார்) குறித்து அமைச்சர் ரமேஷ் தொடர்ந்து புகழ்ந்து பேசியதாகவும், அதனுடன் இணைத்து இந்த பரிசளிப்பு விவாதமாகியுள்ளது என்றும் சில ஹிந்து அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.





