நெதர்லாந்து ராணி மாக்சிமா, நிதி உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக பாராட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளரின் சிறப்பு ஆலோசகர் என்ற பொறுப்பில், நாட்டின் நிதி நிலை தொடர்பான அம்சங்களை மையமாகக் கொண்டு அவர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராணி மாக்சிமா, இந்தியாவிற்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி தெரிவித்தார். அனைத்து மக்களுக்கும் நிதி உள்ளடக்கம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இப்போது அந்த அமைப்புகளை பயன்படுத்தி அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது முக்கியம் என வலியுறுத்தினார்.