தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட காவல் ஆணையரகங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் நிர்வாகத்தில் இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மாற்றங்களுடன், 5 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் (ஏஎஸ்பி) காவல் கண்காணிப்பாளர்களாக (எஸ்பி) பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பணியிடங்களில் தாம்பரம் தலைமையிட துணை கமிஷனராக கண்ணன், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனராக கீதாஞ்சலி நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக ரமேஷ் பாபு, நவீன மயமாக்கல் பிரிவு எஸ்பியாக வேல்முருகன், திருவண்ணாமலை எஸ்பியாக உதயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி, அடையாறு, கோயம்பேடு, திருப்பூர் (வடக்கு, தெற்கு), நெல்லை மேற்கு, திருச்சி வடக்கு ஆகிய இடங்களிலும் துணை கமிஷனர் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்பியாக அர்பிடா ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார்.