வாஷிங்டன்: அமெரிக்கா ஒருபோதும் கம்யூனிஸ்ட் நாடாக மாறாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பார்லிமென்ட் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நியூயார்க் மேயர் சோக்ரான் மம்தானி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

மம்தானி நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட்ட காலத்திலிருந்தே டிரம்ப் அவரை கடுமையாக விமர்சித்து வந்ததாகவும், அவரது அரசியல் அணுகுமுறையையும் தொடர்ந்து தாக்கி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். வழக்கமாக நீளமான பதிவுகளை இடும் அவர், இம்முறை ஒரு வரியில் மட்டும் “அமெரிக்கா ஒருபோதும் கம்யூனிஸ்ட் நாடாக மாறாது” என்று பதிவிட்டார்.