தமிழ்நாடு சட்டசபையில் நேற்று முதல்வர் விஜய் ஒரு சிறிய கதையை எடுத்துச் சொல்லி நையாண்டி கலந்த கருத்தை முன்வைத்தார்.
வெளியில் கண்ணுக்கு மேல் கை வைத்தபடி ஒரு முதியவர் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் வந்த ஒரு சிறுவன், “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்க, அந்த முதியவர் “தம்பி, உங்க அப்பா இங்கதான் இருப்பார்; ஆனா இப்போ உங்க அப்பாவை காணோம்” என்று பதிலளித்ததாக அவர் கூறினார்.
இந்தக் கதையில் வரும் வரியை வைத்து யாரும் “டென்ஷன்” ஆக வேண்டாம் என்றும், தானும் நக்கல், நையாண்டியாக பேசத் தெரியும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மேலும், ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் தரப்பில் எதிர்வினை வந்ததாகக் குறிப்பிட்ட அவர், “பேசு பேசு” என்று தொடர்ந்து சொன்னால் என்ன பேசுவது? எனவும் கேள்வி எழுப்பினார்.





