சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை 300 புதிய அரசு பஸ்களின் சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, புதிய பஸ்சில் பயணம் செய்து ஆய்வும் மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 300 பஸ்களில் 164 டீசல் பஸ்களும், 136 எரிவாயு பஸ்களும் இடம்பெற்றுள்ளன.

சேவை தொடக்கத்தின் பின்னர், தலைமைச் செயலகத்திலிருந்து பெரம்பூர் செல்லும் 29ஏ அரசு பஸ்சில் முதல்வர் விஜய் பயணம் செய்தார். பயணத்தின் போது அவர் டிரைவரிடம் பஸ்சின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், பயணத்தின் போது தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சரியான சில்லறை கொடுத்து கட்டணம் செலுத்திய அவர், கண்டக்டருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.