அமெரிக்கா வலியுறுத்தினாலும் லெபனானின் தெற்கு பகுதிகளில் இருந்து தங்களின் ராணுவ இருப்பை இஸ்ரேல் திரும்பப் பெறாது என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா–ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதன் ஒரு பகுதியாக லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், இதனால் அமைதி ஒப்பந்தத்தின் நிலைத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவமும் விமானப்படையும் திரும்பப் பெறப்படாது; அமெரிக்கா கோரிக்கை வைத்தாலும் வீரர்கள் அப்பகுதியை விட்டு விலக மாட்டார்கள் என காட்ஸ் கூறினார்.
மேலும், இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட மாட்டார்கள்; சுமார் 2 லட்சம் பேர் திரும்ப வரமாட்டார்கள் என்றும், முன்பும் பாதுகாப்பு மண்டலங்கள் என கூறப்பட்ட பகுதிகளில் வெடிப்புகள் நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.





