சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) உள்ள ‘கனடார்ம்2’ ரோபோடிக் கையின் மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய, நாசா விண்வெளி வீரர்கள் அடுத்த வாரம் விண்வெளி நடைபயணத்திற்கு தயாராகி வருகின்றனர்.

நாசா அறிவிப்பின்படி, இந்த விண்வெளி நடைபயணம் ஜூன் 30 அன்று இந்திய நேரப்படி மாலை 6.05 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியின் போது, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் இருக்கும் விண்வெளி நிலையத்தின் முக்கிய கருவியான ‘கனடார்ம்2’ல் பழுதடைந்த மணிக்கட்டு பகுதியை விண்வெளி வீரர்கள் மாற்ற உள்ளனர். அதற்கான மாற்றுப் பகுதி ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் தயார் நிலையில் உள்ளது.

இந்த விண்வெளி நடைபயணத்தை நாசா விண்வெளி வீரர்கள் கிறிஸ் வில்லியம்ஸ் மற்றும் ஜெசிகா மேயர் மேற்கொள்ள உள்ளனர். இதற்கான ஒத்திகை மற்றும் முன்தயாரிப்புகளில் அவர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.