உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, செக் குடியரசை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வலுவான வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டி மெக்சிகோ நகரில் நடைபெற்றது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதையும் அடிக்காமல் சமநிலையில் முடிந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் மெக்சிகோ அணியின் ஆட்ட வேகம் உயர்ந்து, அடுத்தடுத்து மூன்று கோல்கள் பதிவானது.
அதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் தென் ஆப்ரிக்கா, தென் கொரியாவை 1-0 என வீழ்த்தி முக்கியமான வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்ரிக்கா அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது. ‘ஏ’ பிரிவில் அந்த அணி ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என லீக் கட்டத்தை முடித்துள்ளது.





