பெண் ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேனி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரமநாயகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் அவர் பணியாற்றிய காலத்தில், தன்னிடம் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த புகாரை உள் விசாரணை குழு விசாரித்து அறிக்கை அளித்துள்ளது. அதில், பெண் ஊழியரிடம் அருவருக்கத்தக்க முறையில் நடந்துகொண்டதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது நடத்தை அலுவலக ஒழுங்குக்குப் பாதகம் ஏற்படுத்துவதோடு துறையின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, மாற்றுத்திறனாளி நல ஆணையர் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.