தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் துாய்மை பணிகளை தனியார் ஒப்பந்தத்திற்கு விடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு ₹755 கோடி ஒதுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பையும் அவர் கேள்விக்குள்ளாக்கினார்.

தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்திற்கு சுமார் ₹50,000 மற்றும் சிசேரியனுக்கு ₹1 லட்சம் வரை செலவாகும் நிலையில், கட்டணம் அதிகமாக இருந்தாலும் தாய்–சேய் பாதுகாப்புக்காக ஏழை, எளியோரும் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.

எனவே தங்க மோதிரம் வழங்குவதற்கான நிதியை அரசு மருத்துவமனைகளில் உயரிய வசதிகளுடன் கூடிய பிரசவ வார்டுகளை உருவாக்க பயன்படுத்த வேண்டும் என்றும், சில மாதங்களில் குழந்தைக்கு மோதிரம் பொருந்தாமல் போகும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் முதல்வர் விஜய் பேசியது பதவிக்கு உகந்ததல்ல என்றும், சட்டசபையில் அத்தகைய பேச்சை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் திருமாவளவன் விமர்சித்தார்.