சென்னை: என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை சலுகை வாயிலாக விற்பனை செய்ய இந்திய அரசு எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், முந்தைய தி.மு.க. ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட “ஒன்றிய அரசு” என்ற சொல்லை தவிர்த்து, மத்திய அரசை “இந்திய அரசு” என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில், பங்கு விற்பனை முடிவு தமிழக அரசுக்கு வருத்தத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை குறைக்கும் எந்த முடிவையும் கொள்கை ரீதியாக தமிழக அரசு ஆட்சேபிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பங்குகளை விற்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் எனக் கூறி, தன் முடிவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.





