அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் செயலரும், ஒரு அறங்காவலரும் ராஜினாமா செய்துள்ளதாக தினமலர் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் மட்டுமின்றி வியாபாரிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நன்கொடை வழங்கியதாக கூறப்படுகிறது.
பண நன்கொடைகளுடன் சிலர் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ஆபரணங்களையும், வெள்ளிக் கட்டிகளையும் வழங்கியதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
மேலும், 2024-ல் பாலராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





