வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியா வர வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில், இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி மற்றும் நட்பு நாடு என அவர் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே உள்ள நெருக்கமான உறவு ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது என்றும் ரூபியோ கூறினார்.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் வலிமையானது என்றும், அதை இறுதி செய்யும் கடைசி கட்டத்தில் இரு நாடுகளும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜி7 மாநாட்டின் இடையே பிரான்சில் டிரம்ப் மற்றும் மோடி சந்தித்து பேசியதாகவும் அவர் கூறினார்.
மேலும், பிரதமர் மோடியின் தலைமைத் திறனைப் பாராட்டிய ரூபியோ, சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளதாகவும், அவரது தலைமையில் இந்தியா உலக சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.





