சுவிட்சர்லாந்தின் லுகெர்னே நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை படகுப் போட்டியில் இந்திய ராணுவ வீரர்கள் லக்ஷய் மற்றும் உஜ்வால் குமார் சிங் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். உலகக் கோப்பை படகுப் போட்டித் தொடர்களில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் இந்த ஜோடி 6:26.09 நேரத்தில் இலக்கு தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தது. ஹாங்காங் வீரர்கள் இரண்டாம் இடத்தையும், நெதர்லாந்து வீரர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இதுவரை உலகக் கோப்பை படகுப் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்காத நிலையில், இம்முறை அந்த குறையை உடைத்து இந்திய வீரர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த சாதனை படைத்த இரு வீரர்களுக்கும் இந்திய ராணுவம் பாராட்டு தெரிவித்துள்ளது.