உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண உதவும் தொலைநோக்கு பார்வை இந்தியாவிடம் இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய அவர், மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க இந்த பார்வை துணைபுரியும் என்றார்.
மேலும், உலகிற்கு முழுமையை அளிப்பதே இந்தியாவின் பங்கு என்றும், உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிரினங்களின் நலனுக்காக இந்தியாவின் குரலை செவி கொடுத்து கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் குரலை உலகம் கேட்பது தவிர்க்க முடியாதது என்றும், உலகச் சவால்களை முழுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.





