த.வெ.க.வைச் சேர்ந்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், திமுகவில் பல எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் ராஜினாமா செய்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் தெரிவித்தார்.

மதுரையை அடுத்த மேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான ஊழல் விவகாரத்தில் ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.

மேலும், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாகவும், இதுவே கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவதற்கான காரணமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும், கிரானைட் தொடர்பான வழக்குகளில் அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.