சென்னையில் நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோ பங்கேற்கவில்லை.

இதுகுறித்து வைகோ, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்திக்க துரை வைகோ வெளியூர் சென்றதால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

ஆனால், கட்சியின் சில நிர்வாகிகள் கூறுகையில், தந்தை–மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதே முக்கிய காரணம் என தெரிவித்தனர். தி.மு.க. ‘உதயசூரியன்’ சின்னத்தில் வெற்றி பெற்ற ம.தி.மு.க. இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.

அதற்கு அந்த எம்.எல்.ஏ.க்கள், தாங்கள் பதவி விலக வேண்டுமெனில் தி.மு.க. கூட்டணியில் வென்ற துரை வைகோவும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்த ராஜினாமா விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே துரை வைகோ பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.