தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மாணிக்கம் தாகூர், இன்று மாலை 4 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள கட்சி தலைமையகத்தில் பொறுப்பேற்கிறார்.

இதற்கு முன் அந்தப் பதவியில் இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாணிக்கம் தாகூர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தான் வெளியிட்ட வீடியோ பதிவில், 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர்கள் உள்ளதாகவும், ஆட்சியில் பங்கு பெறுவது நீண்டநாள் இலக்காக இருந்து தற்போது அது நிறைவேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் விஜயின் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது என்றும், இப்படியான சூழலில் மாநிலத் தலைவராக பொறுப்பேற்பது பெருமிதம் தருவதாகவும் கூறினார்.

அடுத்த இலக்காக ராகுலை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்றும், அதற்காக தமிழகத்திலிருந்து 40 எம்.பி.க்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.