விக்டோரியா: சீசெல்ஸ் நாட்டில் தமிழர்கள் கட்டிய நவசக்தி விநாயகர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று தரிசனம் செய்தார்.
மூன்று நாள் பயணமாக சீசெல்ஸ் சென்றுள்ள அவர், அந்நாட்டின் 50வது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து விக்டோரியா நகரில் உள்ள கோவிலுக்கு சென்ற பிரதமருக்கு பாரம்பரிய முறையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து சுவாமிகளையும் அவர் வணங்கி வழிபட்டார்.
பின்னர், கோவிலுக்கு வெளியே திரண்டிருந்த இந்திய வம்சாவழியினரை சந்தித்து உரையாடினார்.





