ஜூன் 29 அன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறைக்கான சிறப்புச் சேவை விருதுகள் வழங்கும் விழாவில், லெப். ஜெனரல் கோபாலன் முரளிதரனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ‘அதி விஷிஸ்ட் சேவா’ (AVSM) பதக்கத்தை வழங்கி கவுரவித்தார்.
ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களின் சிறப்பான சேவை மற்றும் துணிச்சலை அங்கீகரிக்கும் உயரிய தேசிய விருதுகளில் ஜனாதிபதி சேவை பதக்கங்களும் இடம்பெறுகின்றன.
இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றும் லெப். ஜெனரல் கோபாலன் முரளிதரனுக்கு, அவரது சிறப்பான பணிக்காக இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.
அதே விழாவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் பிரிவைச் சேர்ந்த லெப். ஜெனரல் நீரஜ் வர்ஷ்னி, பிரிகேட் ஆப் தி கார்ட்ஸ் பிரிவைச் சேர்ந்த லெப். ஜெனரல் ஆதித்யா விக்ரம் சிங் ரதி மற்றும் லெப். ஜெனரல் புனீத் அஹுஜா, வைஸ் அட்மிரல் A.Y. சர்தேசாய், ஏர் மார்ஷல் தருண் சவுத்ரி, சிக்னல்ஸ் பிரிவைச் சேர்ந்த லெப். ஜெனரல் ஹர்பிந்தர் சிங் வந்த்ரா ஆகியோருக்கும் AVSM பதக்கம் வழங்கப்பட்டது.





