சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கை தற்போது அவர் வாபஸ் பெற்றுள்ளார்.

2023ல் தமிழக பாஜவில் இருந்த போது அண்ணாமலை “டி.எம்.கே. பைல்ஸ்” என்ற பெயரில் பலரின் சொத்து விவரங்களை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு டி.ஆர்.பாலு அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராகி டி.ஆர்.பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அடுத்த விசாரணையில் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த உள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இச்சூழலில் டி.ஆர்.பாலு வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.