போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக ஜூலை 1 முதல் குடிமக்கள் இயக்கமாக களத்தில் இறங்க வேண்டும் என்று அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். வெளியிட்ட வீடியோவில், மாற்றம் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் என்றும், போதையில்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜூலை மாதத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து திட்டமிட்டுள்ளதாகவும், முதல் வாரத்தில் தானும் தனது குடும்பமும் இன்று முதல் போதைப்பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என்று உறுதிமொழி எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 12 அன்று பொள்ளாச்சியில் “போதையில்லா பொள்ளாச்சி” என்ற பெயரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ஜூலை 26 அன்று திருச்செந்தூர் பகுதியில் போதையில்லா தமிழகத்திற்கான மக்கள் சந்திப்பு மற்றும் போராட்ட வடிவ நிகழ்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசு தங்களுடைய பணியை செய்வதாகவும், சமுதாய இயக்கமாக நாம் நம்முடைய பணியை செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார். பொள்ளாச்சி மற்றும் திருச்செந்தூர் நிகழ்வுகளில் தானும் பங்கேற்பதாகவும், “வீ தி லீடர்ஸ்” குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களது பகுதிகளில் மக்களை ஒருங்கிணைத்து, அப்பில் உள்ள தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.