நியூ ஜெர்சியில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து ரவுண்ட்-32 போட்டியில் ஸ்வீடனை 3-0 என வீழ்த்திய பிரான்ஸ், கம்பீரமாக ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேறியது. தொடக்கம் முதலே பிரான்ஸ் ஆட்டத்தை கட்டுப்படுத்த, ஸ்வீடன் அணிக்கு எதிர்த்து நிற்க கடினமாக இருந்தது.

முதல் பாதியின் இறுதி நிமிடமான 45வது நிமிடத்தில் கேப்டன் கிலியன் எம்பாப்வே ஸ்வீடன் தற்காப்பை உடைத்து கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் இடைவேளைக்கு பிரான்ஸ் 1-0 என முன்னிலையில் சென்றது.

இரண்டாவது பாதியிலும் பிரான்ஸ் ஆதிக்கம் தொடர்ந்தது. 53வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிசே வழங்கிய பாஸை இளம் வீரர் பிராட்லி பார்கோலா கோலாக மாற்றி முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

ஸ்வீடன் அணியின் பதிலடி முயற்சிகளை பிரான்ஸ் வீரர்கள் கட்டுப்படுத்தினர். 74வது நிமிடத்தில் எம்பாப்வே மீண்டும் கோல் அடித்து தனது இரட்டை கோலை பதிவு செய்ய, பிரான்ஸ் 3-0 என்ற அபார வெற்றியை உறுதி செய்தது.

ரவுண்ட்-16 சுற்றில் பிரான்ஸ் அணி பராகுவேயை எதிர்கொள்கிறது. ‘கோல்டன் பூட்’ போட்டியில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்வே தலா 6 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளனர்; நார்வேயின் ஹாலண்ட் 5 கோல்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.