ஜூன் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.95 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் அதே மாதத்தை ஒப்பிடுகையில் 13.9% உயர்வு ஆகும்.
நிதியமைச்சக அறிக்கையின்படி, உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வசூல் 6.5% உயர்ந்து ரூ.1.35 லட்சம் கோடி ஆக உள்ளது. இறக்குமதி வழியாக கிடைத்த வருமானம் 34.6% அதிகரித்து ரூ.60,038 கோடி ஆக பதிவாகியுள்ளது.
மாநில வாரியாகப் பார்க்கையில், உத்தர பிரதேசத்தில் வசூல் 19% உயர்ந்து ரூ.9,176 கோடி ஆகவும், மஹாராஷ்டிராவில் 9% உயர்ந்து ரூ.30,714 கோடி ஆகவும் உள்ளது. மேலும் அசாம் (17%), பஞ்சாப் (14%), குஜராத் (12%), கர்நாடகா (10%), டில்லி (8%) ஆகிய மாநிலங்களிலும் வசூல் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 5% குறைவும், தமிழ்நாட்டில் 2% குறைவும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஜார்க்கண்டில் வசூல் 16% குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2027 நிதியாண்டின் ஏப்ரல்–ஜூன் முதல் காலாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.6.32 லட்சம் கோடி ஆக இருந்ததாகவும், இது கடந்த ஆண்டை விட 7.1% அதிகம் எனவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.





