அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஊழியர்களில் 2.5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உத்தேசமாக சுமார் 5,500 பேரை பாதிக்கும் என கூறப்படுகிறது.

மேலும், விருப்ப ஓய்வு பெற விரும்பும் ஊழியர்கள் அதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்தி கூறுகிறது.

கடந்த ஆண்டும் பணிநீக்கம் நடவடிக்கைகள் தொடர்ந்தன. முதல் கட்டமாக 6,000 பேரும், இரண்டாம் கட்டமாக 9,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், இது மொத்த ஊழியர்களில் சுமார் 4 சதவீதம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவில் பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், பணிநீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வரும் வாரங்களில் நிர்வாகம் தரப்பில் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.